Map Graph

ஆயிரம் விளக்கு (சென்னை)

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு நகரப் பகுதி

ஆயிரம் விளக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும். இன்றைய ஆயிரம் விளக்குப் பகுதிக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் காணப்படுகின்றன. இப்பகுதி 18ம் நூற்றாண்டில் ஹிந்துஸ்தானியில் நக்சா என்று அறியப்பட்டது. 1795ல் கட்டப்பட்ட ஒரு கட்டடம், நவாப் உம்தத் உல்மாரா என்பவரால் மொகரம் பண்டிகையின் போது ஷியா இனத்தவர்கள் ஒன்றாகக் கூடுவதற்காகக் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஷியா இனத்தவர்கள் மொகரம் பண்டிகைக்காக கூடும் போது, இந்தப் பகுதியில் ஆயிரம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்தே இப்பகுதி ஆயிரம் விளக்கு என்ற பெயர் பெற்றுள்ளது.

Read article
படிமம்:Mosque_at_Thousand_Lights,_Chennai_(1).jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svg